உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போலீசார் பறிமுதல் செய்த பொக்லைன் இயந்திரத்தில் தீ

போலீசார் பறிமுதல் செய்த பொக்லைன் இயந்திரத்தில் தீ

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் போலீசாரால் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், மணல் கடத்தல், அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்ரமிப்பு உள்-ளிட்ட சமூக விரோத செயல்களில் பயன்படுத்தப்-பட்ட பொக்லைன், டாரஸ் மற்றும் வேன்கள் மத்துார் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதி-லுள்ள பொக்லைன் வாகனத்தில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அங்கு சென்ற போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை அலுவலர் சக்திவேல் தலை-மையிலான குழுவினர் தீயை அணைத்தனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை