உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேப்பனஹள்ளி துணிக்கடையில் தீ விபத்து; ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

வேப்பனஹள்ளி துணிக்கடையில் தீ விபத்து; ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி மற்றும் பொருட்கள் கருகி நாசமானது.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சேர்ந்தவர் சுல்தான் ஷெரிப். இவர், வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில், 'ஆதம் டெக்ஸ்டைல்' என்ற பெயரில் துணிக்-கடை நடத்தி வருகிறார். இதில் கீழ்தளத்தில் பெண்களுக்கும், முதல் தளத்தில் ஆண்களுக்கான துணிகள் மற்றும் குடோன் உள்-ளது. சுல்தான் ஷெரிப் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணிக்கு கடை-யிலிருந்து கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் கடையில் தீப்-பிடித்து மளமளவென எரிந்தது. கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடை நெருக்கமான பகுதியில் இருந்-தது. அருகிலேயே தனியார் மருத்துவமனை உள்ளது. தீயணைப்பு வீரர்கள், மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்த போதும் அருகி-லுள்ள கடைகளும் சிறிதளவு பாதிக்கப்பட்டது. தனியார் மருத்து-வமனையில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில், துணிக்கடையின் இரு தளங்களிலும் இருந்த துணிகள் முற்றிலும் கருகி நாசமாகின. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்-பட்டதா அல்லது வேறேதும் காரணமா என்பது குறித்து வேப்பன-ஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள் கருகி நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை