| ADDED : ஜூலை 04, 2024 11:57 PM
ஓசூர்: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் உள்-ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதையடுத்து, ஓசூர் மாநக-ராட்சியில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா உத்தரவிட்டார்.அதன்படி மாநகராட்சியில் வீடு வீடாக சென்று கொசுப்புழுக்-களை ஒழித்தல், டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்க மேற்-கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்ப-டுத்துதல், புகை மருந்து அடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்-கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மாநகர அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில், ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு டெங்கு மற்றும் இதர காய்ச்சல் பரவுதலை தடுக்க வேண்டிய மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநி-திகள், அசோசியேசன் உறுப்பினர்கள், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.