உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு உதவி

பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு உதவி

கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி., பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.லயன்ஸ் கிளப் ஆப் ஓசூர் மக்னம் தொண்டு நிறுவனம் சார்பில், செயற்கை நுண்ணறிவுடைய கண் கண்ணாடிகள் மற்றும் திறன் பேசிகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா, 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவுடைய கண் கண்ணாடிகள் மற்றும், 10,000 ரூபாய் வீதம் திறன்போசிகள் என மொத்தம் 9 மாணவர்களுக்கு, 4.-05 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.செயற்கை நுண்ணறிவுடைய கண் கண்ணாடி பாட புத்தகங்களை படிக்கவும், பார்வையற்றோர்களுக்கு ஏற்படும் பல இன்னல்களை அறிந்துகொள்ளவும், சுற்றுச்சூழலை பற்றிய விவரங்களை தெரிவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், தொண்டு நிறுவன தலைவர் ஆறுமுகசாமி, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை