உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடிப்படை வசதி மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

அடிப்படை வசதி மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

ஓசூர்,ஓசூர் மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேஷ் நகர் பகுதியிலுள்ள எரிவாயு தகனமேடையை, மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் மாரிச்செல்வி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, அப்பகுதியில் புதிய பொது கழிப்பிடம், சாக்கடை கால்வாயை சீரமைத்தல், செடி, கொடிகளை அகற்றுதல், பேவர் பிளாக் சாலை, சுற்றுச்சுவர், இருசக்கர வாகன நிறுத்துமிடம் போன்ற பணிகளை செய்து கொடுக்குமாறு, மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது, மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் ஆஞ்சப்பா, மாநகராட்சி பொறியாளர் விக்டர் ஞானவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி