உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு சம்பவத்தில் 2 மாணவியர் கடத்தல்

வெவ்வேறு சம்பவத்தில் 2 மாணவியர் கடத்தல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, 16 வயது மாணவி, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சியில் உள்ளார். கடந்த, 12 மதியம், 2:00 மணிக்கு, அஞ்செட்-டியிலுள்ள, உறவினர் வீட்டிலிருந்து மாயமானார்.அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை அருகே அலேநத்தம் பகுதியை சேர்ந்த தனியார் கார்மென்ட்ஸ் மேற்பார்-வையாளர் பிரவீன்குமார், 28, என்பவர், மாணவியை திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த, 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்; கடந்த, 12 இரவு, 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், திப்பேன அக்-ரஹாரத்தை சேர்ந்த மாதேஷ் என்பவர், மாணவியை கடத்தி சென்-றது தெரிந்தது. மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை