உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம் சுகாதார பணிகளுக்கு ரூ.1.88 கோடி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம் சுகாதார பணிகளுக்கு ரூ.1.88 கோடி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி:துப்புரவு தளவாடங்கள், சுகாதாரப்பணிகள் மற்றும் இதர செலவுகளுக்கு, 1.88 கோடி ரூபாய் ஒதுக்கி கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார். இதில், துப்புரவு தளவாடங்கள், சுகாதாரப்பணிகள், பணியாளர்கள் சீருடை, வாகன பராமரிப்பு மற்றும் இதர செலவினங்களுக்காக நடப்பாண்டின் தோராய செலவிற்கு, 1.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிதா நவாப் பேசுகையில், தர்மபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்கும், சி.ஏ.ஏ., சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசுகையில், நகராட்சியின் சில வார்டுகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. தெருவிளக்குகள் எரியவில்லை எனக்கூறினர். இது குறித்து அலுவலர்களிடம் கூறினாலும், கண்டு கொள்வதில்லை என புகார் தெரிவித்தனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறினார்.புதிதாக சிமென்ட் சாலை, மழைநீர் வடிகால், பைப்லைன், சிறுபாலம் அமைப்பது என்பன உள்ளிட்ட, 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை