உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணையிலிருந்து 2ம் போக சாகுபடிக்கு நீர்திறப்பு

கே.ஆர்.பி., அணையிலிருந்து 2ம் போக சாகுபடிக்கு நீர்திறப்பு

கிருஷ்ணகிரி, டிச. 19-கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, வலது மற்றும் இடதுபுற கால்வாய் மூலம், நேற்று முதல், வரும், 2025 ஏப்., 16 வரை, 120 நாட்களுக்கு, தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் நீரை திறந்து வைத்து, மலர் துாவினர்.பின்னர், மாவட்ட கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, வலது மற்றும் இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு, 151 கன அடி என, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், 16 பஞ்.,ல் உள்ள, 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அணையில் தற்போது, 51.30 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு, 475 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து, 463 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இதில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜமோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி