மேலும் செய்திகள்
ஊத்தங்கரையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
26-Oct-2025
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 50,000 கன அடியாக சரிவு
26-Oct-2025
ரூ.1.35 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
26-Oct-2025
கிளீன் கிருஷ்ணகிரி சார்பில் துாய்மை பணி
26-Oct-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரையில் நாளை, தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.இது குறித்து கிருஷ்ணகிரி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் உத்தரவுப்படி, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை, 6:00 மணிக்கு கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரையில் நடக்கிறது. கிருஷ்ணகிரி, ஐந்து ரோடு ரவுண்டானா அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள், பொன்னேரி சிவா, விஷார் தமிழரசன் பேசுகின்றனர். பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர்கள் போடி காமராஜ், அன்புவாணன் பேசுகின்றனர். ஊத்தங்கரை, நான்கு ரோடு ரவுண்டானா அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் கோவிந்தன், சைதை பாஸ்கர் ஆகியோர் பேசுகின்றனர். இக்கூட்டங்களில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025