உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எங்கள் வீடுகளின் நிலையை பாருங்கள் : கண்ணீர் மல்க கதறிய இருளர் இன மக்கள்

எங்கள் வீடுகளின் நிலையை பாருங்கள் : கண்ணீர் மல்க கதறிய இருளர் இன மக்கள்

கிருஷ்ணகிரி : இடிந்த வீடுகளில் வாழும், 50க்கும் மேற்பட்டோர், 'எங்கள் வீடுகள் நிலைமையை நேரில் பாருங்கள்' எனக்கூறி கலெக்டரை முற்றுகை-யிட்டு, கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, காளி-யம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், காமாட்சி-புரம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, இருளர் இன மக்கள், 50க்கும் மேற்-பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவ-லகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'காடுகளில் கிடைக்கும் விறகு, தேன் எடுத்து பிழைப்பு நடத்தி வரு-கிறோம், எங்களுக்கு கடந்த, 1989 ல், 35 தொகுப்பு வீடுகளை, அரசு கட்டி கொடுத்தது. அதன் பின்-னரும் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, தற்போது, 100க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. அதில் தற்போது, 55க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்தும் கூரை, சுவர்கள் இடிந்து அபாய நிலையிலும் உள்ளன. பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.அவர்களிடம் பர்கூர் பி.டி.ஓ., கலா மற்றும் அதி-காரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கலெக்டரை நேரடியாக சந்திக்க வாக்குவாதம் செய்த அவர்களை, போலீசார் அனுமதித்தனர். கலெக்டர் சரயுவை சந்தித்த அவர்கள், 'எங்கள் வீடுகளின் நிலையை நேரில் வந்து பாருங்கள். எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. வீடு-களில் துாங்க முடியாமல், இரவில் அருகிலுள்ள பள்ளியில் துாங்குகிறோம்' எனக்கூறி அழுதனர்.அவர்களிடம் பேசிய கலெக்டர் சரயு, “அந்த வீடு-களை சரிசெய்ய அரசிடம் ஒப்புதல் வந்துள்ளது. பல வீடுகள் சரிசெய்ய முடியாத நிலையில் இருப்-பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உங்கள் வீடுகளை நேரில் வந்து பார்க்கிறேன். அதன் பின், வீடுகளை சரிசெய்ய முடியுமா அல்லது புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டுமா என, அரசுக்கு முன்மொழிதல் கடிதம் அனுப்பப்படும்,” என ஆறுதல் கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை