உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

ஓசூர், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பருதி, 43. பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 25 காலை ஓசூர் ஜூஜூவாடி மேம்பாலம் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் நின்ற வாலிபர் ஒருவர் இளம்பருதியை நிறுத்தி, கத்தி முனையில் அவரிடம் பணத்தை பறிக்க முயன்றார். இளம்பருதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து, சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியை சேர்ந்த ரேகன்கான், 26 என்றும், லாரி மெக்கானிக் என்பதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ