உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பசுமை குடிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

பசுமை குடிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

பாகலுார், கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த குடிசாதனப்பள்ளி அருகே, நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ், 22. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, பாகலுார் அருகே அச்சந்திரம் கேட் பகுதியிலுள்ள வெங்கடப்பா கவுடு என்பவரது நிலத்தில், பசுமை குடில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 15 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், பாகலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர். பின் மேல்சிகிச்சைக்கு, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை