| ADDED : டிச 30, 2025 05:35 AM
ஓசூர்; ஒடிசா மாநிலம், கேத்திராபடா மாவட்டம், ஜரியாபாத் பகுதியை சேர்ந்தவர் அபிராம் பிகாரே, 22. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மைசூரு சாலையில் தங்கி, ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில், ஹிட்டாச்சி வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். கடந்த, 24ம் தேதி மாலை, 5:20 மணிக்கு, ஓசூர் சாமனப்பள்ளி மீனாட்சி நகரில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, அங்குள்ள ராமப்பா என்பவரது, ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட வீட்டின் மீது பந்து விழுந்தது. அதை எடுக்க அதன் மீது ஏறிய அபிராம் பிகாரே கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.