உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., ஐ.டி., விங் நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., ஐ.டி., விங் நிர்வாகிகள் கூட்டம்

ஊத்தங்கரை:ஊத்தங்கரை, அ.தி.மு.க., ஐ.டி., விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊத்தங்கரை, எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட ஐ.டி., விங் செயலாளர் வேலன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில், அ.தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், சக்கரவர்த்தி, தேவராசு, நகரச்செயலாளர் சிக்னல் ஆறுமுகம் மற்றும் ஐ.டி., விங் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ