ஓசூர்: ஓசூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமைச்சர் சக்கரபாணி பரிகளை வழங்-கினார்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஓசூரில் மாநில அளவிலான கபடி போட்டி மூன்று நாட்கள் நடத்தப்பட்-டன. இதில், 38 மாவட்டங்களிலிருந்து மொத்தம், 40 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அணியினர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்தார். ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார்.ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கரூர் அணிக்கு, 1.50 லட்சம் ரூபாய், இரண்டாமிடம் பெற்ற சென்னை அணிக்கு, 1 லட்சம் ரூபாய், மூன்று மற்றும் நான்காமிடம் பெற்ற கன்னியாகு-மரி, திருச்சி அணிகளுக்கு தலா, 50,000 ரூபாய், பெண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களை பெற்ற கரூர், அரியலுார், சென்னை, திருவண்ணாமலை அணிகளுக்கு, தலா, 50,000 பரிசுத்-தொகை மற்றும் கோப்பையை, அமைச்சர் சக்கரபாணி வழங்-கினார். தமிழக ஆண்கள் அணிக்கு, 20 வீரர்கள் தேர்வு செய்யப்-பட்டனர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், முருகன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.