மேலும் செய்திகள்
கிணற்றில் இறந்தவர் குறித்து விசாரணை
06-Jul-2025
கிருஷ்ணகிரி, கல்லாவி அடுத்த கூரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 75. கடந்த, 12ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். நேற்று முன்தினம் வீராச்சிக்குப்பம் அருகே ஒரு விவசாய கிணற்றில் சடலமாக மிதந்தார். விசாரணையில், குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிந்தது. கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Jul-2025