உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தில் வயல்வெளிகளை அதிகாரி ஆய்வு

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தில் வயல்வெளிகளை அதிகாரி ஆய்வு

கிருஷ்ணகிரி : 'ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற புதிய திட்டத்தில், தேர்வு செய்த பயனாளிகளின் வயல்களை, மாநில அளவிலான பயிற்சி நிலைய இயக்குனர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி காட்டிநாயனபள்ளி கிராமத்தில், மாநில அளவிலான பயிற்சி நிலைய இயக்குனர் சங்கரலிங்கம், 'ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற புதிய திட்டத்தில், நிலக்கடலை, துவரை பயிரில் செயல்விளக்கம் செய்ய, தேர்வு பயனாளிகளின் வயல்களை ஆய்வு செய்தார். வேளாண் இயந்திரமாக்குதல் துணை இயக்கம் திட்டத்தில் வழங்கப்பட்ட சூழல் கலப்பையை ஆய்வு செய்தார். பயிருக்கான நிலம் தயாரிப்பு, பாசன நீர் ஆய்வு, உயர்விளைச்சல் ரகங்கள், விதை நேர்த்தி, விதைப்பு முறை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், மண் பரிசோதனை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் மேலாண்மை போன்ற அனைத்து தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண் இணை இயக்குனர் பச்சியப்பன், தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் இடுபொருட்கள், அதன் பயன்கள் குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் சங்கரலிங்கம், கோடை உழவு செய்வதை துவக்கி வைத்தார். அதியமான் கல்லுாரி மாணவர்கள் மண் மாதிரி எடுத்தல் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்து, எடுக்கும் முறைகள், தவிர்க்க வேண்டிய இடங்கள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை