உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெரிய சப்படி கோவில் நிலம் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு

பெரிய சப்படி கோவில் நிலம் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பெரிய சப்படியில் பழமையான வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கீழுள்ள இக்கோவிலின், 4 ஏக்கர் நிலங்கள் நேற்று ஏலம் விடப்படுவதாக இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் நிலத்தை ஏலம் எடுப்பவர்கள், நிலத்தில் மண் திருடுவது, கல்குவாரி கழிவுகளை விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனவே, இந்த நிலங்களை தரிசாக கருதி, கால்நடைகள் மேய்ச்சலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றனர். இதனால் ஏலம் நடத்த வந்த ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் ஏலத்தை நடத்தாமல் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை