உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டுமனை, பட்டா கோரி ஜமாபந்தியில் மக்கள் மனு

வீட்டுமனை, பட்டா கோரி ஜமாபந்தியில் மக்கள் மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், வீட்டுமனை பட்டா கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 8 வட்டங்களிலும் கடந்த, 14ல் ஜமாபந்தி தொடங்கி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில், வேப்பனஹள்ளி ஒன்றியம், மாதேப்பள்ளி அடுத்த பந்திகுறியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பந்திகுறி கிராமத்தில், 300 ஆதிதிராவிட குடும்பங்களை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இங்கு ஒரே வீட்டில், 3 முதல், 4 குடும்பங்களை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். அரசு வழங்கும் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தும் பயனில்லை. எனவே, எங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ