உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிளஸ் 1 மாணவி அடித்துக் கொலை ஏரியில் உடல் மிதந்ததால் பரபரப்பு

பிளஸ் 1 மாணவி அடித்துக் கொலை ஏரியில் உடல் மிதந்ததால் பரபரப்பு

ஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ் மகள் ஸ்பூர்த்தி, 16; பாகலுார் அரசு பெண்கள் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 14ல் அதிகாலை, 2:00 மணிக்குவீட்டிலிருந்து மாயமானார். நேற்று முன்தினம் இரவு தலையில் காயங்களுடன், பட்டவாரப்பள்ளி ஏரியில் சடலமாக மிதந்தார். பாகலுார் போலீசார் சடலத்தை மீட்டுவிசாரித்தனர்-.இதில், முத்தாலியை சேர்ந்த சிவா, 25, என்ற வாலிபரும், ஸ்பூர்த்தியும் காதலித்துள்ளனர். மாணவிக்கு, 18 வயது பூர்த்தியாகாத நிலையில் 2022 அக்டோபரில் மாணவியை ஆசைவார்த்தை கூறி, வீட்டிலிருந்து சிவா அழைத்து சென்றார். மாணவியின் பெற்றோர் புகார்படி, சிவாவை போக்சோ சட்டத்தில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அதன் பின்பும், ஸ்பூர்த்தி, சிவா காதல் தொடர்ந்ததால், பெற்றோர் கண்டித்துஉள்ளனர்.மாணவியின் வீட்டின் அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் பார்த்தபோது, மாணவி மாயமான சமயத்தில், மர்ம நபர் ஒருவர், 'சிசிடிவி' கேமராவை துணி போட்டு மூடிஉள்ளார். மேலும், மாணவியை யாரோ அடித்துக்கொன்று, சடலத்தை ஏரியில் போட்டது விசாரணையில் உறுதியானது.மாணவியின் தந்தை பிரகாஷ், 40, தாய் காமாட்சி, 35, ஆகியோரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிள் பகுதியில், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், அழுகிய நிலையில் சாக்கடை கால்வாயிலிருந்து நேற்று மாலை மீட்கப்பட்டது. பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டு, காயங்கள் உள்ளன. அதனால், அப்பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்து, கால்வாயில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை