உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி வெறிச்

போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி வெறிச்

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் அதிகளவு ஆடுகள், நாட்டு கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். கடந்த, 17-ல் புரட்டாசி மாதம் பிறந்தது. இம்மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்ப்பர்.இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு விவசாயிகள், வியாபாரிகள், 200க்கும் குறைவான ஆடுகளையே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை