உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்திகிரி அரசு கால்நடை பண்ணை மூலம் 9 லட்சம் உறைவிந்து குச்சிகள் உற்பத்தி

மத்திகிரி அரசு கால்நடை பண்ணை மூலம் 9 லட்சம் உறைவிந்து குச்சிகள் உற்பத்தி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி அரசு கால்நடை பண்ணையில், உறைவிந்து உற்பத்தி நிலையம், கருமாற்று தொழில்நுட்ப பிரிவு, சோதனை குழாய் கருவுறுதல் ஆய்வகம் ஆகியவற்றை, மாவட்ட கலெக்டர் சரயு நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:உறைவிந்து உற்பத்தி நிலையத்தில், கலப்பின ஜெர்சி, சிவப்பு சிந்தி, காங்கேயம், புலிக்குளம், சாகிவால் ஆகிய இனங்களின் உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதுமுள்ள கால்நடை மருந்துவ நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. நடப்பாண்டு, 2023 - 24 ல் மட்டும், 9.13 லட்சம் உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கருமாற்று தொழில்நுட்ப பிரிவு, 2012 ல் துவங்கப்பட்டு, 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, தேனி, கோவை, திருப்பூர், வேலுார், திருவண்ணா மலை, ஈரோடு, கரூர் ஆகிய, 12 மாவட்ட விவசாயிகளிடம் வளர்க்கப்படும் தகுதியான ஜெர்சி பசுக்களை தேர்வு செய்து, கருக்கள் செலுத்தப்பட்டு, 286 உயரின கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.2019ல் கனடாவிலிருந்துதுாய ஜெர்சி மற்றும் ஹோல் ஸ்டீன் பிரிசீயன் இன, 110 உறை கருக்கள் இறக்குமதி செய்து, புதுக்கோட்டை, செட்டிநாடு மற்றும் நடுவூர் மாவட்ட கால்நடை பண்ணைகளிலுள்ள பசுக்களுக்கு செலுத்தப்பட்டு, 36 துாய ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசீயன் இன கன்றுகள் உற்பத்திசெய்யப்பட்டன. காளை கன்றுகள், உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்ய வழங்கப்பட்டன.நாட்டு பசுக்களை உற்பத்தி செய்ய,4.50 கோடி ரூபாய் மதிப்பில், ஓசூர் புதுக்கோட்டை, நடுவூர் கால்நடை பண்ணைகளில், சிவப்புசிந்தி, காங்கேயம், பர்கூர், புலிக்குளம், உம்பாளசேரி ஆகிய, 5 இன பசுக்களுக்கு கருக்கள் கருமாற்றம் மற்றும் சோதனை குழாய் கருவுறுதல் மூலம், 84 கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை