உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பணம் பறித்தவருக்கு காப்பு

பணம் பறித்தவருக்கு காப்பு

ஓசூர், ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் வாசிம் அக்ரம், 35. கடந்த, 13ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ராஜகணபதி நகரிலுள்ள சுடுகாட்டு பகுதியை கடந்து சென்ற போது, அங்கிருந்த ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, வாசிம் அக்ரமிடமிருந்து, 5,000 ரூபாயை பறித்து சென்றார். அவர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி பசவராஜ், 34, என்பவர், பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை