உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: மத்திய அரசை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாய விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சாமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி