| ADDED : ஜூலை 12, 2024 12:56 AM
கிருஷ்ணகிரி: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான, வங்கி கடன் ஆணைகளை, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் வழங்கினார்.கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டம் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் ஆணைகளை வழங்கி பேசியதாவது:மகளிர் தங்கள் சொந்தக்காலில் நிற்க, மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டன. இதன் மூலம் பல பெண்கள் முன்னேறி வருகின்றனர். கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள, 20 சுய உதவிக் குழுக்களுக்கு, 3 முதல், 5 லட்சம் ரூபாய் வரை வங்கி கடனுக்கான ஆணை, தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு குழுவுக்கும் சுழல் நிதியாக, 10,000 ரூபாய் வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், சமுதாய அமைப்பாளர், நகராட்சி கவுன்சிலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.