உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒரே நாளில் மழை, வெயில்; சீதோஷ்ண நிலை மாற்றம்

ஒரே நாளில் மழை, வெயில்; சீதோஷ்ண நிலை மாற்றம்

கிருஷ்ணகிரி: 'டிட்வா' புயலால் கிருஷ்ணகிரியில் கடந்த, 3 நாட்களாக வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில், மழை வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காலை, 10:00 மணிக்கு திடீரென தோன்றிய சூரியனால் வெப்பம் வாட்டியது. பின்னர் சூரியன் மறைந்து சாரல் மழை பெய்தது. மதியம், 2:00 மணிக்கு மேல் மீண்டும் கடுமையான வெப்பம் வாட்டியது. திடீர் திடீரென சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ