மேலும் செய்திகள்
பஞ்., பணியாளர்கள் பி.டி.ஓ., ஆபீசில் மனு
04-Feb-2025
விரிவுரையாளர்கள் போராட்டம்
04-Feb-2025
அதியமான்கோட்டை: தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், கருத்தரங்கம் அதியமான்கோட்டையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் உட்பட பலர் பேசினர்.இதில், தமிழகத்தில், 12,525 கிராம பஞ்.,களில் பணிபுரிந்து வரும் பணிப்பதிவேடு உள்ள ஆப்பரேட்டர்கள், 250 ரூபாய் ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு பணி வரன்முறை வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த துாய்மை பணியாளர்களுக்கு காலைமுறை ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டு பணி முடிந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம், 10,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கம் நடந்தது. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் மணி நன்றி கூறினார்.
04-Feb-2025
04-Feb-2025