உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாட்டரி விற்ற 7 பேருக்கு காப்பு

லாட்டரி விற்ற 7 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அந்தந்த பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற அரசம்பட்டி சரவணன், 56, தர்மபுரி மாவட்டம், பிடமனேரி முருகேசன், 49, கெங்கிநாய்க்கன்பட்டி கருணாகரன், கட்டிகானப்பள்ளி அஜித்குமார், 27 ஆகியோரை கைது செய்தனர். கெலமங்கலம் போலீசார் டவுன் பகுதியில், லாட்டரி சீட்டு விற்ற, கெலமங்கலம் கணேஷ், 22, விருப்பாச்சி நகர் சந்திரசேகர், 29, ஜீவா நகர் கோகுலகிருஷ்ணன், 39, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மாருதி கார், 1.50 லட்சம் ரூபாய், 7 மொபைல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ