| ADDED : ஜன 06, 2024 07:14 AM
நல்லம்பள்ளி : நல்லம்பள்ளி, இந்தியன் வங்கி முன் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புகழேந்தி கோரிக்கைகள் குறித்து பேசினார். லோக்சபா பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி கேள்வி எழுப்பிய எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெற வேண்டும். மழை, வெள்ளம் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட பேரிடர் நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணியை, மனித உழைப்பு கொண்டு பணி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தின சம்பளமாக, 600 ரூபாய் வழங்குவதுடன் ஆண்டுக்கு, 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.