| ADDED : ஜூன் 03, 2024 07:18 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில், கடந்த ஜன., 1 முதல் கடந்த மே, 31 வரை மொத்தம், 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 63 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தலில் ஈடுபட்டதாக, 138 பேர் கைது செய்யப்பட்டு, 31 டூவீலர்கள், 31 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம், 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 76 இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனங்கள், 35, என மொத்தம், 112 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு, 31.41 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. கடந்த, 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளிகள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.