உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல் கடத்திய லாரி் பறிமுதல்

கல் கடத்திய லாரி் பறிமுதல்

ஓசூர் : விழுப்புரம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி மற்றும் உத்தனப்பள்ளி பகுதியில், வாகன சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதியின்றி, போடிச்சிப்பள்ளி தனியார் கிரஷரில் இருந்து, 50,000 ரூபாய் மதிப்புள்ள கற்கள் ஏற்றிச்சென்ற லாரி மற்றும் சூளகிரிக்கு ஒரு கிரானைட் கல் கடத்தி சென்ற லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கெலமங்கலம் மற்றும் உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரிகளின் உரிமையாளர்கள், டிரைவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை