உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாரத் ரைஸ் பெயரில் அரிசி விற்பனை; லாரியை மடக்கி போலீசில் ஒப்படைப்பு

பாரத் ரைஸ் பெயரில் அரிசி விற்பனை; லாரியை மடக்கி போலீசில் ஒப்படைப்பு

ஓசூர்: நாட்டில் அரிசி விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் மூலம், பாரத் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ, 29 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் அருகே பாகலுாரில், பாரத் ரைஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்ட, 10 கிலோ எடை கொண்ட பையில், ஒரு கிலோ, 29 ரூபாய் என்ற அடிப்படையில், 290 ரூபாய்க்கு நேற்று அரிசி விற்பனை செய்யப்பட்டது. ஒரு லாரி முழுவதும் லோடு கொண்டு வந்து, அரிசி விற்பனையில் தனிநபர்கள் ஈடுபட்டனர். மத்திய அரசின் அரிசி என நம்பி, குறைந்த விலை கொடுத்து மக்கள் வீடுகளுக்கு போட்டி போட்டு வாங்கி சென்றனர். அதன் பின்பு தான் தெரிந்தது, அது மத்திய அரசின் அரிசி இல்லை என்பதும், ரேஷன் அரிசி போல் இருப்பதும் தெரியவந்தது.ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரியுடன் அரிசி மூட்டைகளை மடக்கி, பாகலுார் போலீசில் ஒப்படைத்தனர். 10 கிலோ பைகளில் இருப்பது ரேஷன் அரிசியா அல்லது தரமான அரிசியான என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை