உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் காரில் கடத்தல்:டிரைவர் கைது

புகையிலை பொருட்கள் காரில் கடத்தல்:டிரைவர் கைது

தொப்பூர்;பாளையம் சுங்கச்சாவடி அருகே, வாகனச்சோதனையின் போது பிடிபட்ட காரிலிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரை கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம் சுங்கச்சாவடியில் தொப்பூர் போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த, மாருதி சுசூகி சுவிப்ட் டிசையர் காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 25 மூட்டைகளில், 300 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதில், காரை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த ஓட்டுனர் சுரேஷ், 50, என்பவரை தொப்பூர் போலீசார் கைது செய்து, கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை