உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண், கற்கள் கடத்தல் பொக்லைன் பறிமுதல்

மண், கற்கள் கடத்தல் பொக்லைன் பறிமுதல்

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி ஆர்.ஐ., புஷ்பா மற்றும் அதிகாரிகள், நேற்று முன்-தினம் படவனுார் அருகில் ரோந்து சென்றனர். அங்கு மண் மற்றும் கற்கள், அந்த பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் உதவியுடன் கடத்தியது தெரிந்தது. இது குறித்து புஷ்பா அளித்த புகார்படி, சாமல்பட்டி போலீசார், பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.அஞ்செட்டி வி.ஏ.ஓ., ஜார்ஜ் மற்றும் அதிகாரிகள் கடுகந்தம் பகு-தியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் பொக்லைன் மற்றும் டிராக்டர் மூலம், அரை யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்-தது. இது குறித்து ஜார்ஜ் புகார்படி, அஞ்செட்டி போலீசார் வழக்-குப்பதிந்து, டிராக்டர் மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ