சாக்கடை கால்வாய் வசதியின்றி அவதி
அரூர், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட காந்திநகரில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடும் துர்நாற்றம் வீசி வருவதால், பகுதிவாசிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.