த.வெ.க., கட்சிக்கு அங்கீகாரம்: தொண்டர்கள் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி: நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, த.வெ.க., கட்சி தொண்டர்கள், மாவட்ட தலைவர் வடிவேல், செயலாளர் சுரேஷ், நகர தலைவர் சசிகுமார், நிர்வாகிகள் முகுந்த் பாண்டியன், அருள் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், இருந்து டூவீலரில் கட்சிக் கொடியுடன் பேரணியாக சென்று, ரவுண்டானா அருகே பட்டாசு வெடிக்க முயன்றபோது, டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, இங்கு பட்டாசு வெடிக்கக்கூடாது. மீறினால் வழக்குப்பதியப்படும் என எச்சரித்தார். பின், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை, 1,000 பேருக்கு இனிப்பு வழங்கினர். பின் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். * ஊத்தங்கரையில், சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தாமோதரன் தலைமையில், ஒன்றிய தலைவர் தர்மன் முன்னிலையில், கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.