உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மேகதாது அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும்

மேகதாது அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும்

ஓசூர்: ''தி.மு.க., அரசு மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என, வாய் சவடால் விடுகிறது. மேகதாது கட்டப்பட்டால், ஓசூர், கிருஷ்ணகிரி மட்டுமல்ல, தமிழகமே பாலைவனமாக மாறி விடும்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷை ஆதரித்து, ஓசூர் ராம்நகரில் நேற்று மாலை அவர் பேசியதாவது:கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும், காங்., வேட்பாளர், காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட வேண்டியவர். எம்.எல்.ஏ.,வாக, 3 முறை வெற்றி பெற்று, தொகுதி பக்கமே வராமல், மொத்தமாக பெங்களூருவில் செட்டிலானவரை, வேட்பாளராக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா. அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும் என, டில்லியில் குரல் கொடுப்பார்கள்.தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றிய பெருமை, தி.மு.க.,வையே சாரும். போதை, டாஸ்மாக் கலாசாரத்தால், தமிழகமே தள்ளாடுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. இதை சரிசெய்ய வேண்டிய, தி.மு.க., அரசு, டாஸ்மாக், லாட்டரி, கஞ்சா விற்பனையில் கோடி, கோடியாய் சம்பாதிக்கிறது.தமிழக முதல்வர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால், அவரை தகுதியில்லாத முதல்வர் என, மக்கள் சொல்லலாமா. தேர்தல் வந்தவுடன், தி.மு.க., அரசு மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என, வாய் சவடால் விடுகிறது. மேகதாது கட்டப்பட்டால், ஓசூர், கிருஷ்ணகிரி மட்டுமல்ல, தமிழகமே பாலைவனமாக மாறி விடும். எனவே, அ.தி.மு.க., - தே.மு.தி.க., இணைந்து, மேகதாது அணை கட்ட விடாமல் தடுப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, காவேரிப்பட்டணம் பகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், பகுதி செயலாளர் ராஜி, தே.மு.தி.க., மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமிரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.தர்மபுரி லோக்சபா தொகுதியில் நேற்றிரவு, அ.தி.மு.க., வேட்பாளர் அசோகனை ஆதரித்து, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய இடங்களில் பிரேமலதா பிரசாரம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி