உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இளம்பெண் தற்கொலை காய்கறி வியாபாரி கைது

இளம்பெண் தற்கொலை காய்கறி வியாபாரி கைது

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மூர்த்திகொட்டாயை சேர்ந்தவர் மோனிஷா, 27; இவரது கணவர் மேகநாதன், காய்கறி வியாபாரி. கிருஷ்ணகிரி அடுத்த சென்னசந்திரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். மேகநாதனுக்கு அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த மோனிஷா கடந்த, 27ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மோனிஷாவின் பெற்றோர் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் மேகநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ