உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மர்ம -நபர்கள் தாக்கியதில் காயமடைந்த கோவில் காளை

மர்ம -நபர்கள் தாக்கியதில் காயமடைந்த கோவில் காளை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, புளியாண்டப்பட்டி கிராமத்தில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக கோவில் காளை ஒன்று இருந்து வருகிறது. இந்த காளையை சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள், விழா காலங்களில் கோவில்களுக்கு பிடித்து சென்று எருது ஆடும் விழா கொண்டாடி வருவது வழக்கம்.இந்நிலையில் நான்கு மாதத்திற்கு முன்பு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கோவில் காளையின் பின்புறம் உள்ள இரண்டு கால்களையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடக்க முடியாமலும், உணவை தேடி செல்ல முடியாமலும் சாலையோரம் தடுமாறி சென்று வருகிறது. ஒரு சிலர் தண்ணீர், வைக்கோல் உள்ளிட்டவைகளை கோவில் காளைக்கு உணவாக கொடுக்கின்றனர். எனவே, கோவில் காளையை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவரை வைத்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை