உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிராமத்திற்குள் வந்த யானை மக்கள், வாகன ஓட்டிகள் பீதி

கிராமத்திற்குள் வந்த யானை மக்கள், வாகன ஓட்டிகள் பீதி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இதில், ஆலள்ளி காப்புக்காட்டில் கூட்டத்துடன் சேராமல், கடந்த சில மாதங்களாக ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிகிறது. இது அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, ஆலள்ளி கிராமத்தில் புகுந்து, சாலையில் ஹாயாக நடந்து சென்றது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தெறித்து ஓடினர். யானையை, தாரை, தப்பட்டை அடித்து மக்கள் விரட்டிய பின், வனப்பகுதி நோக்கி ஒய்யாரமாக நடந்து சென்றது. அடிக்கடி குடியிருப்புக்குள் வரும் யானையால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர். யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை