சூளகிரி அருகே ஆற்று தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்
சூளகிரி: சூளகிரி அருகே ஆற்று தண்ணீரில் இறங்கி, மூதாட்டி சடலத்தை மக்கள் சுமந்து சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பீலாளம் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகு-தியில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய மயான வசதி இல்லை. இதனால் தனியார் பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் அடக்கம் செய்ய வேண்டி-யுள்ளது. சடலத்தை எடுத்து செல்லும் வழியில் ஆறு உள்ளது. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும். அப்போது சட-லத்தை ஆற்று நீரில் இறங்கித்தான் கொண்டு செல்ல வேண்டியுள்-ளது.இந்நிலையில் பீலாளத்தை சேர்ந்த குர்ரம்மா, 98, வயது மூப்பால் நேற்று இறந்தார். சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து, ஆற்றின் இடுப்-புளவு தண்ணீரில் இறங்கி இருபுறங்களிலும் கயிற்றை கட்டி பிடித்து, ஆபத்தான முறையில் சுமந்து சென்றனர். இப்பகுதி காட்-டாற்றின் குறுக்கே, தரைமட்ட பாலம் கட்டி தர வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தை மயானத்துக்கு ஒதுக்க பல ஆண்டுகளாக கேட்டும், அதிகாரிகள் செவி சாய்க்காமல் உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவித்தனர்.