உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் முகமது அக்பர் மனைவி ஆயிஷா, 25, கூலித்தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் மனைவி லட்சுமி, 44. இருவரும் அருகருகே வசிக்கின்றனர். முன்விரோதம் இருந்ததால் கடந்த, 31ல் வார்த்தை தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமி, சூடான இரும்பு கம்பியால் ஆயிஷாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் கை, முகத்தில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆயிஷா கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் லட்சுமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை