உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துவக்கப்பள்ளி ஆசிரியை இடமாறுதல் ; காலை உணவை புறக்கணித்த மாணவர்கள்

துவக்கப்பள்ளி ஆசிரியை இடமாறுதல் ; காலை உணவை புறக்கணித்த மாணவர்கள்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, அத்திகானுாரில், அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த, 2008ல் ஐ.எஸ்.ஓ., 9001 தரச் சான்றிதழ் பெற்று, மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக செயல்படுகிறது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக கவிதேவி என்ற ஆசிரியை பணி செய்து வந்தார். இவரால் இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர் கல்வி, விளையாட்டு என பல துறைகளிலும் சிறந்து மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்தனர். நேற்று முன்தினம் ஆசிரியை கவிதேவி, மத்துார் அரசு துவக்கப் பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்று சென்றார். இப்பள்ளியில் படித்து வந்த, 100 மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் இருந்து உணவு சாப்பிடாமலும், விரக்தியான மனநிலையிலும் இருந்து வந்தனர். பள்ளிக்கு நேற்று, 47 மாணவ, மாணவியர் வந்த நிலையில், 53 பேர் வரவில்லை. இந்நிலையில் நேற்று பள்ளி வந்த மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல் புறக்கணித்தனர். அதிருப்தியடைந்த பெற்றோர் நேற்று அத்திகானுார் அரசு துவக்கப்பள்ளியை முற்றுகையிட்டதுடன், மத்துாரிலுள்ள வட்டார கல்வி அலுவலகர் லோகநாயகியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கவிதேவி மீண்டும் எங்கள் பள்ளிக்கு பணியமர்த்த வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகள், பெற்றோர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்ய வேண்டுமென அத்திகானூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை