உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.3 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி

ரூ.3 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 41வது வார்டில், ராயக்கோட்டை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே, சாலை நடுவே, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் வேலி அமைத்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, லுாமினஸ் என்ற தனியார் நிறுவனம் முன்வந்தது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. அப்பகுதி வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன் தலைமை வகித்தார்.ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க., மேற்கு மாவட்ட பொருளாளர் சுகுமாரன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். லுாமினஸ் நிறுவன உதவி தலைவர் சுதர்சனன் பிள்ளை, மனிதவளத்துறை பொதுமேளாளர் அதிசயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை