மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
07-Mar-2025
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் நேற்று, த.வெ.க., கட்சியின் மாவட்ட செய-லாளர் அறிமுக விழா, மாற்று கட்சியினர் இணையும் விழா, அதேபோல் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், 500 பேருக்கு சேலை, வேட்டிகள், தென்னங்கன்றுகள், 500 பேருக்கு உள்-ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், நிகழ்ச்சியில் கலந்து-கொண்ட, 1,000க்கும் மேற்பட்டோருக்கு, சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை போச்சம்பள்ளி பகுதியிலுள்ள, த.வெ.க.,வினர் ஒன்-றிணைந்து நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் முரளிவிஜய், மாவட்ட கழக இணை செயலாளர், தாமோதரன், பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர் குஷிசிவா, துணை செயலாளர் ஜெகதீஸ்வரி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
07-Mar-2025