உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 15 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

15 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மாநில எல்லை பகுதியான ஜூஜூவாடி சோதனை சாவடியில் மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். பஸ்சில் பயணித்த மதுரையை சேர்ந்த, வேல்ராஜ், 24, தினேஷ்ராஜ், ௦௯23, ஆகியோர் 7 மூட்டைகளில், 15 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.விசாரணையில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு, பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூரு வந்து, அங்கிருந்து சேலம் வழியாக மதுரை செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி