உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பெரிய மோட்டூரை சேர்ந்தவர் சின்னபிள்ளை, 60, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 8ல், பெரிய மோட்டூர் பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், சின்னபிள்ளையிடம் முகவரி கேட்பது போல பேசி, திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். சின்னபிள்ளை கே.ஆர்.பி. டேம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், நகையை திருடியது சூளகிரி தாலுகா போகிபுரத்தை சேர்ந்த முரளி, 34, செம்பரசனப்பள்ளி பாப்பையா, 21 என தெரிந்தது. நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி