உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இருவேறு விபத்தில் இருவர் பலி

இருவேறு விபத்தில் இருவர் பலி

இருவேறு விபத்தில் இருவர் பலிகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளியை சேர்ந்த முதியவர் சின்னபையன், 63. கூலித்தொழிலாளி. கடந்த, 14 இரவு, 7:30 மணியளவில் சோமார்பேட்டை கூட்ரோடு அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.* திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் ராஜா, 44, லாரி டிரைவர். இவர், கடந்த, 14ல், முசிறியில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றார். இரவு, 9:30 மணியளவில் சப்பானிப்பட்டி மேம்பாலம் அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில், ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை