| ADDED : டிச 26, 2025 06:04 AM
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சாஸ்திரமுட்லுவை சேர்ந்தவர் பரமேஸ்வரி, 29. இவர், ராயக்கோட்டை தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். கடந்த, 23 மாலை அவர் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், ஓசூர் - தர்மபுரி சாலையில், டி.வி.எஸ்., என்டார்க் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, அவ்வழியாக சென்ற லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்-றனர்.சூளகிரி அடுத்த செம்பரசனப்பள்ளியை சேர்ந்தவர் குணசேகர், 21. இவர் கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்-லுாரியில், பி.இ., 4ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஹீரோ பல்ஸ் பைக்கில், கொத்தப்பள்ளி அருகில் கடந்த, 23 இரவு சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த ஹீரோ ஸ்பிளண்டர் பைக்-குடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குணசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஸ்பிளண்டர் பைக்கை ஓட்டி வந்த, 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.