மேலும் செய்திகள்
வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
10-Oct-2025
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வி.சி., கட்சியினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ராசப்பா வரவேற்றார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய வக்கீல் ராகேஷ் கிஷோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது காரை வழிமறித்து காரின் முன் தகராறு செய்த வக்கீல் ராஜிவ்காந்தியை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நகர செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.
10-Oct-2025